Friday 17 July 2020

வண்டல்மண்

மண்வகைகள் 


வண்டல்மண்


  • ஆற்றுப்படுகைகள் வெள்ளப்பெருக்கு சமவெளி, கடற்கரைச் சமவெளி, டெல்டா .


  • வண்டல்மண்  ஆறுகளால் படிய வைக்கப்படுகிறது .
  • இந்த  மண் விவசாயத்திற்கு பெரும்பங்குவகிக்கின்றது
  • இந்த  மண் இரண்டு வகைப்படும்- பாங்கர்,காதர்

  1. காதர்-புதியதாக படைக்கப்பட்ட வெளிர் நிறம்.
  2. பாங்கர்- பழைய களி மண்ணுடன் கூடிய மண்.சட்லஜ், கங்கை, யமுனா, கண்டக் , காக்ரா, பஞ்சாப், ஹரியானா, உத்திரப்பிரதேசம், பீகார், இவைகள் தென்னிந்தியாவின் காவிரி ஆற்றுப்படுகைகள்.

 விளையும் பயிர்கள்-மிகவும் வளமான மண்.கோதுமை, கரும்பு, பருத்தி, எண்ணெய் வித்துக்கள்.

கரிசல்மண்


  • தீப்பாறைகள் சிதைவுறுவதால் காரிசல்மண் உருவாகுகிறது 
  • கோதாவரி நர்மதா தபதி கிருஷ்ணா ஆற்றுப் பள்ளத்தாக்கு காணப்படுகிறது.
  • இது  கருப்பு முதல் பழுப்பு   நிறம் வரை  காணப்படுகிறது.

  • சுண்ணாம்பு ,இரும்பு ,அலுமினியம், கால்சியம் ,மெக்னீசியம் ,கார்பனேட்  ஆகிவை இந்த மண்ணில் உள்ள சத்துக்கள் .
  • பாஸ்பரஸ்,நைட்ரஜன் போன்ற உயிரி பொருட்கள் கரிசல்மண்ணில் இல்லை. 
  • கரிசல்மண் ஈரப்பதத்தை தேக்கி வைப்பதால்  புகையிலை, எண்ணெய் வித்துக்கள் ,கடுகு ,சூரியகாந்தி ,பழங்கள் ,காய்கறிகள் போன்றவை  இந்த மண்ணில் நன்கு விளையும். 
  • மத்திய பிரதேசம்  ,மகாராட்டிரம் ,குஜராத் மற்றும் ஆந்திராவின் சில பகுதிகளிலும் , தமிழ்நாட்டின் தென்பகுதியிலும் காணப்படுகின்றன.

செம்மண் 

  • செம்மண்ணில் அதிக அளவில் இரும்பு சத்து காணப்படுகிறது,அதனால் இந்த மண் செந்நிறத்தில் காணப்படுகின்றது.
  • இதே போன்று  செம்மண் பழுப்பு நிறம்  முதல்  மஞ்சள் நிறம்  வரை  காணப்படுகின்றது .
  • செம்மண்ணில் நுண் துளைகள் அதிகம்  இருப்பதால் ஈரப்பதத்தை தக்க வைக்க முடியாது.

  • சுண்ணாம்புச்சத்து நைட்ரஜன் பாஸ்பரஸ் ஆகியவை குறைவாக உள்ளது .உரமிடுவதன் மூலம் நல்ல ஆரோக்கியமான மண்ணாக உருவாக்கலாம் .
  • செம்மண் தமிழ்நாட்டின்  பெரும் பகுதியில் காணப்படுகிறது .மேலும் கர்நாடகா ,ஆந்திரா ,ஒரிசா,மத்திய பிரதேஷ் ஆகிய பகுதிகளிலும் காணப்படுகிறது .  
  •  விளையும் பயிர்கள்-கரும்பு, நெல், பருத்தி, கோதுமை மற்றும் பருப்பு வகைகள்.

சரளை மண்



  • தீபகற்ப பீடபூமியில் அதிகமாக சரளை மண்  காணப்படுகிறது. 
  • அதிக துளைகள் இருப்பதால் சிலிகா  நீக்கப்படுகிறது.
  • கேரளா ,தமிழ்நாடு ,ஒரிசா ,கர்நாடகா போன்ற சில பகுதிகளில் சரளைமண் காணப்படுகின்றது .
  • சரளை மண் கடின தன்மை கொண்டது .இதில் இரும்பு ஆக்சைடு இருப்பதால் சிவப்பு நிறமாக  காணப்படுகிறது.
  • விளையும் பயிர்கள்-காப்பி  ,இரப்பர், மரவள்ளி ,முந்திரி.

 

மலை மண் 

  • மலை மண்ணில் அதிகம் சாம்பல் மற்றும் இலை சத்து உள்ளது .
  • மலை மண்  ஜம்முகாஷ்மீர் ,ஹிமாச்சல பிரதேஷ் ,கிழக்கு மற்றும் மேற்க்கு தொடர்ச்சி மலைகளில் காணப்படும் .
  • விளையும் பயிர்கள்- தேயிலை,காபி,ரப்பர்.


பாலை மண்


  • பாலை  மண் ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத் போன்ற பகுதிகளில் காணப்படுகிறது .
  • இந்த மண் மணல் மற்றும் காரத்தன்மை கொண்டது.
  • இதன் பி எச்(pH ) மதிப்பு 8 ( 7 க்கு கீழே அமிலத்தன்மை 7க்கு மேல் காரத்தன்மை ).இது இரண்டு தன்மையும் கொண்டது .எனவே பாலை மண் பயிரிட ஏற்றது அல்ல.
  • விளையும் பயிர்கள்(பாசனத்துடன் ) -கோதுமை,நெல் , பார்லி, திராச்சை .

                                                              முகப்பு